ஒ.என்.ஜி-யை எதிர்த்து கிராம மக்களுடன் அனைத்து கட்சியினரும் துணை நின்று போராடுவோம் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், தஞ்சாவூரில் கடந்த 1ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கதிராமங்களத்தில் ஓஎன்ஜிசி-யை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினரும் துணைநின்று போராடுவோம் என, அவர் எச்சரிக்கை விடுத்தார்
