த.மா.கா., தலைவர் ஜி.கே.,வாசன் தேனியில் கூறியதாவது:த.மா.கா., ஒத்த கருத்துடைய கட்சியினருடன் இணைந்து செயல்படும். ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அங்கு பணநாயகத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. டில்லி விவசாயிகள் போராட்டத்தை அரசியலாக்கி, கொச்சைப்படுத்த வேண்டாம்.எனவே, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்து, புதிய கடன்களை வழங்க வேண்டும். நெடுவாசலில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இப்போது ‘ஹட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்,என்றார்.
