மத்திய அரசின் செயலற்ற தன்மையால் மீனவர் பிரச்னை நீடித்துக் கொண்டே போகிறது : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம் பகுதியில் இருந்து சென்ற மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, துப்பாக்கியால் அச்சுறுத்தி, மீன்பிடி சாதனங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.கள் கரைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தமிழக அரசு கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.

மேலும் இந்த சம்பவத்தால் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற சுமார் 8 லட்சம் நஷ்ட ஈட்டையும் பெற்றுத்தர வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அராஜகத்தை,  அந்நாட்டு அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசின் செயலற்ற தன்மையால் மீனவர் பிரச்னை நீடித்துக் கொண்டே போகிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை சிறையில் வாடும் 60 மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளை மீட்கவும் உடனடியாக மத்திய அரசு, இலங்கையோடு பேச வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *