தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழகத்தின் காவிரி நதிநீர் பிரச்னை தீர்க்காதது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்டா விவசாயிகளுக்கு காவிரி நீரை நியாயமாகப் பெற்றுத் தராதது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்காதது, முல்லை பெரியாறு மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசின் அணை கட்டும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்காதது, தமிழக மீனவர் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காணாதது, மக்கள் எதிர்ப்பை மீறி புதுக்கோட்டை நெடுவாசல் கிராமப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவது போன்ற மத்திய-மாநில அரசுகளின் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமான செயல்பாட்டை கண்டித்து, தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 14-ம் தேதி தமாகா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி அன்றைய தினம் நடக்கும் போராட்டங்களில் தமாகா நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கின்றனர்.
– See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=104337#sthash.f06cbRlG.dpuf
