பன்றிக்காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பன்றிக்காய்ச்சல் பரவி வருவதால் ஆங்காங்கே பலர் குறிப்பாக குழந்தைகள், சிறுமிகள் உயிர் இழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. நோய் தாக்குவதற்கு முன்பே அது குறித்த விழிப்புணர்வையும், நோய் தடுப்பு முறைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக சுகாதாரத்துறையின் கடமை. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து சுகாதார நிலையங்களிலும் போதிய மருந்துகள் இருப்பில் இருப்பதையும், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் போதிய அளவில் முழு நேர மருத்துவச் சேவைக்காக பணியில் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
முக்கியமாக தொற்று நோய்கள் எளிதில் பரவுவதால் அவற்றை பரவாமல் தடுப்பதற்கு அனைத்து சுகாதார வசதிகளையும், மருத்துவ முகாம்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சுகாதாரத்துறையின் கடமை. நோய் தாக்குவதிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி போடும் முறையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கும், நோய் தாக்கியவர்களை காப்பாற்றவும் தமிழக சுகாதாரத்துறை எடுத்துள்ள நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தி நோயினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றவும், இனிமேல் இந்நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் வேண்டும். என்று தமிழக அரசை த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *