ஜல்லிக்கட்டுக்காக அறவழியில் போராடிய மக்களை விடுதலை செய்ய வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஜல்லிக்கட்டு தொடர்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டது நியாயமற்ற செயலை வெளிப்படுத்தியிருக்கிறது. போராட்டக்காரர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் இருந்தால், அவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தான் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவி புரிந்த சென்னை மயிலை அம்பேத்கர் பாலம், அயோத்தி குப்பம், நடுக்குப்பத்தைச் சேர்ந்த பகுதி வாழ் மீனவர்களை கைது செய்ததும், அவர்களது கடைகளை அடித்து நொறுக்கியதும், அவர்கள் மீது பொய் வழக்கு போட்டதும் ஏற்புடையதல்ல. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே கைது செய்யப்பட்ட, அறவழியில் போராடிய சென்னை பகுதி மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகிய அப்பாவி மக்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும் மீனவ பகுதிகளில் சேதமடைந்த கடைகளுக்கு நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *