அனைவருக்கும் நீட் தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்வி கொள்கை இல்லாததால் நீட் தேர்வு முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதில் சிக்கல் ஏற்படும் என்றும், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தெரியாமல் மசோதாவை நிறைவேற்றி இருப்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
