சென்னை – தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புயல் பாதிப்பால் மக்கள் அவதிப்படுவதால் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாட ஜி.கே.வாசன் முடிவு செய்தார். அதன்படி நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சியினர் அவரது பிறந்த நாளை இன்று கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து கோயில்கள், ஆலயங்கள், தர்கா ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று, அன்னதானம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் போன்றவைகள் வழங்கப்பட்டன. ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களில் அன்னதானம் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டன.
மருத்துவ முகாம்கள், இரத்ததானம், இலவச கண் அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ரொட்டி, பால், பழம் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் அந்தோணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மற்றும் மத்திய அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=101562#sthash.CocARMCa.dpuf
