ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் கடும் வறட்சி காரணமாக மஞ்சள் பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட 2 விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
பணத்தட்டுப்பாட்டினால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அனைத்து தொழில்களும் முடங்கிபோய் உள்ளன. அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பணத்தட்டுப்பாட்டினால் மக்கள் படும் துயரங்களை நேரில் வந்து பார்க்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு வரும்… ஆனால் வராது.. என்ற நிலையே இப்போது உள்ளது. ஜல்லிகட்டு நடத்தக்கோரி த.மா.கா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை மத்தியஅரசு கைவிட வேண்டும். இந்த நடவடிக்கையால் அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது. எனவே இதை கண்டித்து எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ விடியல்சேகர், மாநில துணை தலைவர் ஆறுமுகம் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
