கச்சத்தீவு கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள மத்திய அரசு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.

கச்சத்தீவு கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள மத்திய அரசு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும்.

த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இது தொடர்பாக இன்று திரு.ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை :-

”கச்சத்தீவுப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோணியார் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கிறது. காரணம் தமிழக கடலோர மாவட்ட மீனவ மக்களுக்கு கலாச்சாரம் மற்றும் வழிப்பாட்டுத் தலமாக இந்த கோயில் விளங்குகிறது.

இதனால் தான் தமிழக மீனவர்கள் ஒவ்வோர் ஆண்டும் இந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள்.

எனவே, தமிழக மீனவர்கள் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் இந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள மத்திய அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கி, அவர்கள் சென்று வர அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும்.

எனவே மத்திய அரசு தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் கச்சத்தீவுப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோணியார் கோயிலுக்கு மீனவர்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும்” என்று திரு.ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

#gkvasan #tamilmaanilacongress
#tmcfortn #tnpolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *