தமிழக அரசு மெத்தனமாக இயங்குகிறது- ஜி.கே.வாசன்

தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் தமிழக அரசின் செயல்பாடு மெத்தனமாக உள்ளது. பணிகள் எதுவும் முறையாகவோ விரைவாக நடக்கவில்லை என்று த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இதற்கு உதாரணமாக காவிரி நீர் பிரச்னையை சொல்லலாம் என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு தண்ணீரை தர வேண்டிய கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தண்ணீர் தர முடியாது என தீர்மானம் போடுகிறது. தண்ணீரைப் பெற வேண்டிய தமிழக அரசோ அனைத்துக் கட்சி கூட்டத்தைகூட கூட்ட மறுக்கிறது எனவும் வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *