என் தமிழ் மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:– வீட்டில் மகிழ்ச்சி, வெளியில் மத்தாப்பு பட்டாசும், நாட்டுக்கு நம்பிக்கை தரும் நாள் இது. இருள் மறைந்து, ஒளிபரப்பும் இந்நாள் முதல், தமிழகத்தின் தீராத பிரச்சினைகள் தீர வேண்டும். தொழில் வளர வேண்டும். விவசாயிகள் வாழ்வில் ஒளிதீபம் ஏற்ற வேண்டும். மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிய வேண்டும். தமிழகம் தழைக்க வேண்டும். தரணி மக்கள், தமிழ் மக்களின் செயல் திறனைப் போற்ற வேண்டும். தீபஒளி பரவட்டும். தீராத பிரச்சினைகள் தீரட்டும். தேன் தமிழ்போல் தமிழ் மக்கள் வாழ்வு இனிக்கட்டும், செழிக்கட்டும் என என் தமிழ் மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *