யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொலை: ஜி.கே.வாசன் கண்டனம்

யாழ்ப்பாணத்தில் 2 தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 தமிழ் மாணவர்களை இலங்கை காவல் துறையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது.

கொலை செய்ததை மறைப்பதற்காக சைக்களில் சென்ற அந்த மாணவர்கள் சாலை விபத்தில் இறந்ததாக இலங்கை அரசு முதலில் கூறியது. அதன் பிறகு, மாணவர்கள் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால்தான் சுடப்பட்டனர் என்று தெரிவித்தது.  இந்தச் சம்பவம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மத்திய அரசு இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு, இந்தச் செயலுக்குக் காரணமான காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை மக்களுக்கு இணையான பாதுகாப்பு தமிழர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *