காவிரி விவகாரம் அரசியல் பிரச்சினை அல்ல: வாசன்

காவிரி பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், தமாகா, மமக உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்றன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வாசன் கூறுகையில், ”காவிரி பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினை அல்ல. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை.

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்து விட வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *