தண்ணீர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும்” – ஜி.கே. வாசன் வேண்டுகோள்

சென்னை செல்லம்மாள் கல்லூரி மாணவிகள் 3 பேர் தண்ணிர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்கள். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கல்லூரிக்கு நாளை ஒரு நாள் விடுமுறை விடுவதாகவும் செல்லம்மாள் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளதாவது, சென்னை மாநகரில் இயங்கும் தண்ணீர் லாரிகளை முறைப்படுத்த வேண்டும். மேலும், கல்லூரி மாணவிகள் இறப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *