விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜ அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உணவு தானியங்களின் உற்பத்தியைப் பெருக்கி, விலைவாசியைக் கட்டுப்படுத்தி, தொழில்துறையை முன்னேற்றுவோம் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரை விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய பாஜ அரசு தவறிவிட்டது. குறிப்பாக நாடு முழுவதும் விவசாய தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு, உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்து கொண்டே போகிறது. எனவே விவசாய தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனை ஊக்கப்படுத்த வேண்டிய செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

தமிழக அரசு அன்றாடத் தேவையான பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய், மாவு வகைகள் போன்றவற்றை தரமானதாக, மலிவு விலையில் கூட்டுறவு அங்காடிகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றில் தங்கு, தடையின்றி வழங்கிட வேண்டும். தற்போது பண்டிகைக் காலம் வருவதால்  சாதாரண ஏழை, எளிய மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *