பாஜக, காங்கிரஸ் விவசாயிகளை வஞ்சிக்கின்றன: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் அரசியல் லாபத்துக்காக தமிழக டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வருகின் றன என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமாகா சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.நடராஜன் வரவேற்றார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்துப் பேசினார்.

பின்னர் ஜி.கே.வாசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழ கத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன் றம் உத்தரவிட்டும், கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பது வேதனை யளிக்கிறது. மத்திய பாஜக அரசு அரசியல் லாபத்துக்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா மல் தடங்கல் ஏற்படுத்தி, விவசாயி களை வஞ்சித்து வருகிறது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும், தங்கள் அரசியல் லாபத்துக்காக தமிழக டெல்டா விவசாயிகளை பகடைக் காயாக்கி, வஞ்சித்து வருவது ஏற்புடையதல்ல. தேசிய கட்சிகளின் இந்த நிலை தொடர்ந்தால், விவ சாயிகள் வர்க்கம் தேசியக் கட்சி களை ஒருபோதும் ஏற்றுக்கொள் ளாது. வரும் உள்ளாட்சித் தேர்த லில் இதற்கான பாடத்தை தமிழக மக்கள் தேசிய கட்சிகளுக்கு கற் பிப்பார்கள்.

தமிழக அரசு காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, பிரதமரைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *