சித்தராமையாவுக்கு ஜி.கே வாசன் கண்டனம்!

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழகத்துக்கு காவிரி நீரை தர முடியாது என்று கூறியுள்ள சித்தராமையாவுக்கு வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு சட்டத்தை மீறுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர் மானம் நிறைவேற்றுகிறது என்றும் கர்நாடகத்தின் இந்த நடவடிக்கை இருமாநில மக்களின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் வாசன் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க வேண்டும் என்றும் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *