காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகம் செயல்பட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார். நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்படவேண்டும் எனவும் வாசன் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
