ஜி.கே.மூப்பனாரின் 15-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் தொல்.திருமாவள வன், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 15-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள ஜி.கே.மூப்பனாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், தமாகா மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம் உட்பட தமாகா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அஞ்சலி செலுத் தினர்.
மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி ஏழை, எளிய மாணவர்களுக்கான உபகரணங் களை ஜி.கே.வாசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது ஜி.கே.வாசன் நிருபர்களிடம் பேசியதாவது:
மறைந்த ஜி.கே.மூப்பனார் அரசியலில் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். அரசியல் நாகரிகத்து டன் எல்லாக் கட்சித் தலைவர் களுடன் நெருங்கி பழகியவர். காமராஜர் வழியில் எளிமையான அரசியல் வாழ்க்கையை மேற் கொண்ட அவர், அடித்தட்டு மக்க ளுக்கும் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று பாடுபட்டார். ஜி.கே.மூப்பனாரின் நினைவு தினத்தை தமாகாவினர் தமிழகம் முழுவதும் அனுசரிக்கின்றனர்.
தமிழகத்தில் மாநகராட்சி மேயர் களை தொடர்ந்து நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களையும் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக் கும் முறை கொண்டு வரப்பட வுள்ளது. எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளை தேர்தல் சமயத்தில் அறிவிப்போம். மற்றபடி, தமாகா உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.கே.மூப்பனாரின் நினை டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு உள் ளிட்டோரும் நேற்று அஞ்சலி செலுத்தின
