வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஜி.கே. வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வங்கி ஊழியர்களின் போராட்டம் காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே, அவர்களுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், காவிரி, பாலாறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முடிவு கட்டவும் வலியுறுத்தி தமாகா இளைஞரணி சார்பில் வரும் 3-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் வாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *