உண்மை நிலை வெளிவரும் என்று நம்புகிறோம்: ஜி.கே.வாசன்

திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தல் நேரத்தில் திருப்பூரில் ரூ. 570 கோடி ரொக்கத்தை கொண்டு சென்ற 3 கண்டெய்னர் லாரிகளை, தேர்தல் பறக்கும் படையினர் பிடித்தனர். திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சி.பி.ஐ. விசாரணையின் மூலம் உண்மை நிலை வெளிவரும் என்று நம்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *