வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் 
கொலை செய்யப்பட்ட சுவாதி குறித்து வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்டு 6 நாட்கள் ஆகியும் கொலையாளியை போலீசார் கண்டு பிடிக்கவில்லை. சுவாதி படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாதியின் கொடூரக் கொலைக்கு காரணமான குற்றவாளியை போலீசார் உடனே கைது செய்யவேண்டும். கொலை செய்யப்பட்ட சுவாதி குறித்து வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
மக்கள் அதிகம் கூடும் ரெயில்நிலையம், பஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *