தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் பொருளாதாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டிற்கு நெல்லுக்கான ஆதரவு விலையை ஒரு குவிண்டாலுக்கு 60 ரூபாய் மட்டும் உயர்த்தி வழங்க அறிவித்துள்ளது. இது மிகவும் குறைவானதாகும். ஏற்கனவே ஒரு குவிண்டால் நெல்லின் விலை ரூ.1410, தற்போது அறிவித்திருக்கும் ஆதரவு விலையோடு சேர்த்தால் அதன் விலை ரூ.1470.
இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
