புதிய சட்ட மசோதாவுக்கு ஆதரவளிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை

நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்க்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சரவைக் குழு  கூட்டம் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் மற்றும் மலையாளி கவுண்டர் சமுதாயத்தினரை  எஸ்.டி  பிரிவில் சேர்க்கும் சட்டதிருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உட்பட அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தரவேண்டும் என்றும் வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *