மக்கள் மன மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை: ஜி.கே.வாசன்

தமிழக மக்கள் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த மன மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்ற த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை சந்திக்க குறைந்த கால அவகாசம் இருந்ததாலும், கூட்டணியின் இரண்டு கட்சிகளுடைய புதிய சின்னத்தை பிரபலப்படுத்தக் கூடிய நிலை இருந்ததாலும், பட்டிதொட்டி எங்கும் எங்கள் நோக்கம் முழுமையாக சென்றடையவில்லை. தேர்தலில் அதிமுக, திமுக பணபலத்தை தேர்தல் ஆணையம் தடுக்க தவறியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
மேலும், தமிழக மக்கள் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த மன மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. காலப்போக்கில் உண்மை நிலை உணர்ந்து, மக்கள் மனநிலையை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறோம். இருப்பினும் ஜனநாயகத்திலே மக்களே எஜமானர்கள். மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களிலே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கும் அதிமுக தலைமைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். தமிழகத்தில் த.மா.காவையும், எங்கள் கூட்டணியையும் பலப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *