சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் பணபலத்தை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மாற்றத்தை விரும்பிய மக்கள், தங்கள் மனதை மாற்றிக் கொள்ளவில்லை. தேர்தலை பொறுத்தவரை வாக்குக்கு விலை பேசுவதை சில கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளன. அதே சமயம், ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டவர்களை தேர்தல் ஆணையம் தடுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை.
இதற்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.இந்த தேர்தலில் பணபலத்தை தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது. இனி வரும் தேர்தல்களில் மக்கள், வாக்குக்கு விலை பேசுபவர்களை புறக்கணிக்க வேண்டும். அதே போல், இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள், கூட்டாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிட்டனர். மதுவில்லாத சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வருங்காலத்தில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி-தமாகா கூட்டணியை மேலும் பலப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார். – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=92956#sthash.86sIwHa3.dpuf
