50 ஆண்டுகளாக செய்யாத திமுக, அதிமுக- ஜி.கே. வாசன்: திமுக, அதிமுகவும் ஒருவர் கொண்டு வந்த வளர்ச்சி திட்டத்தை மற்றவர் நிறைவேற்றாமல் முட்டுக்கட்டை போடுவதையும், மாறி மாறி ஊழல் செய்துகொண்டு ஒருவர் மீது மற்றவர் வழக்கு போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த உண்மையை மக்கள் நன்கு புரிந்துவிட்டனர். எனவேதான் ஊழலற்ற விஜயகாந்த தலைமையிலான வெளிப்படையான நேர்மையான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்காமல் இரு கட்சிகளும் இருந்து வந்துள்ளன. 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியும், 3 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் இதுவரை செய்யாததையா இனி தமிழக மக்களுக்கு செய்யப்போகின்றனர் என்றார் வாசன்.
