தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி- தமாகா கூட்டணி தமிழர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி- தமாகா கூட்டணி தமிழர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

தமாகா தலைவர் திரு.ஜி.கே.வாசன் பேச்சு

கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் திரு.ஜி.கே.வாசன் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

நாகர்கோவிலில் மதிமுக வேட்பாளர் கிறிஸ்டின்ராணி செல்வினை ஆதரித்து அவர் பேசியதாவது:

* இதுவரை நடைபெற்ற தேர்தலைவிட இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள் நாம்தான்.

* திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நகரங்கள் வளர்ச்சி அடையவில்லை. இதற்குக் காரணம், அவர்களின் மெத்தனப்போக்கு. எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நகர்ப் பகுதிகள் உள்ளன என்றால், இந்தக் கட்சிகள் தேவையா?
அதிமுகவும் திமுகவும் மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. அதற்குக் காரணம், இதுவரை அவர்களை அகற்ற வலுவான கூட்டணி அமையாததே. இந்த முறை மக்கள் விரும்பும் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளோம். இந்த வலுவான கூட்டணியால் தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லையெனில், இனி ஆண்டவன் வந்தாலும் தமிழகத்தை ஊழலிலிருந்து காப்பாற்ற முடியாது.

* இந்தக் கூட்டணி தமிழர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
மனமாற்றம் வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

* காமராஜர் ஆட்சியில் கல்வி, தொழில், சுகாதாரப் புரட்சிகள் நடைபெற்றன. அப்போது, நாட்டில் முதல் இடத்திலிருந்த தமிழகம், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கடைசி மாநிலமானது வேதனையளிக்கிறது.

* அதிமுக ஆளும் கட்சியாக இருக்கலாம். திமுக ஆண்ட கட்சியாக இருக்கலாம். ஆனால் நாம் ஆளப் போகும் கட்சி. அவர்களுக்கு பண பலம் இருக்கலாம். ஆனால் நமக்கு மக்கள் பலம் உள்ளது என்றார்.

‪#‎gkvasan‬ ‪#‎tamilmaanilacongress‬ ‪#‎tmcfortn‬ ‪#‎tnelection2016‬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *