கட்சியின் எதிர்கால நலன் கருதியே மக்கள் நலக் கூட்டணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நலன் கருதியே தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வாசன் கூறியதாவது:

தமிழ் மாநில காங்கிரசின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், வளர்ச்சிக்காவும் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டது.

தமாகா-விற்கு மரியாதை கிடைக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் கூட்டணி முடிவை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். மற்றவர்கள் ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும், கட்சியில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறினார்.

மேலும், காமராஜரின் கனவை நினவாக்கும் கூட்டணி அமைந்துள்ளது. தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறினார்.