வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு வாங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
தலைவர் திரு.ஜி.கே.வாசன் அறிவிப்பு
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் உள்ள காமராஜ் பவன் கட்டிட பிரச்சனையில், காங்கிரஸ்- தமாகா இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆம்பூர் நகர தலைவர் தட்சணாமூர்த்தி படுகாயம் அடைந்து, மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வரும் சட்ட மன்றத் தேர்தலில், தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு வாங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
சட்ட மன்றத் தேர்தலில் தமாகா கூட்டணி அமைத்து போட்டியிடும்.
ஆனால், யாருடன் கூட்டணி அமைப்பது என்று இன்றும் முடிவு செய்யவில்லை என்றார் நம் தலைவர்.