கடந்த 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை. இதுவே தற்போதைய வெள்ளப் பாதிப்புகளுக்கு காரணம் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்.
அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை. இதுவே தற்போதைய வெள்ளப் பாதிப்புகளுக்கு காரணம். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 15 நாள்களாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான உணவு, உடை, பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணத் தொகையும், சோளம், துவரை, பருத்தி ஆகியவற்றுக்கு நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
