100 நாள் கூலியை உடனே வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை – See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=103340#sthash.GzpF1S7U.dpuf

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூலியை உடனடியாக கொடுப்பதில்லை. பல்வேறு மாவட்டங்களில் 50 நாட்கள் கடந்த பின்பும் கூலி கொடுக்கப்படாதது மிகுந்த வருத்தத்துக்குரியது. 85 சதவீத வேலையாட்களுக்கு காலதாமதமாகத் தான் கூலி கிடைப்பதாகவும் வேலையாட்கள் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்துகிறார்கள். அன்றாடம் கூலித் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இது போன்று கூலியை தராமல் காலம் தாழ்த்துவது என்ன நியாயம். இத்திட்டத்தின் மூலம் – ஒரு நாள் வேலைக்கு 203 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் வேலைத்திறன் என்ற காரணத்தைக் கூறி ஒரு நாள் கூலியாக ரூ.140.86 மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக அரசு 100 நாள் வேலை திட்டத்திற்காக நிலுவையில் உள்ள 780 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்திற்கான கூலியை வேலையாட்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் ஆண்டுமுழுவதும் வேலை வழங்கவும் நாள் கூலியை குறைந்த பட்சம் 250 ரூபாய் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். – See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=103340#sthash.GzpF1S7U.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *