திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன். முன்னாள் எம்.எல்.ஏ. தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தயார் சாரதம்மாள் நேற்று காலமானார் அவரது மறைவு செய்தி கேட்ட ஜி.கே.வாசன் பொதட்டூர்பேட்டைக்கு நேரில் சென்று முன்னாள் எம்.எல்.ஏ. ராமனை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:–
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் நெசவாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழக அரசு முன்வரவேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 500 யூனிட் மின்சாரத்தை 1,000 யூனிட்டுகளாக உயர்த்தி தரவேண்டும். நெசவாளர்கள் தயாரிக்கும் ஆடைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
அவருடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் மாவட்ட தலைவர் கும்மிடிப்பூண்டி சேகர், செயலாளர் செந்தில், பொருளாளர் பக்தவச்சலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
