மு.கஸ்டாலினுடன் ஜி.கே வாசன் சந்திப்பு உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி சூசக தகவல்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பிற்கு பின்னர்,வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்னையான காவிரி, முல்லைப் பெரியார்,பாலாறு நீர் பங்கீடு குறித்து பேசினோம். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதித்தோம்.நீண்ட காலத்திற்கு பிறகு அரசியல் ரீதியாக ஸ்டாலினை சந்தித்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்திக்கவிருக்கிறேன். “என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காகத்தான் ஸ்டாலினை சந்தித்தீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு,”நான் ஸ்டாலினை அரசியல் ரீதியாக சந்தித்துள்ள போதே,அதற்கு பின்னர் இருக்கும் காரணம் குறித்து உங்களுக்கே தெரியும்.”என தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து வாசன் சூசகமாக தெரிவித்தார்.

இன்னும் ஓரிரு நாட்களில் திமுக தலைவர் கருணாநிதியை வாசன் சந்தித்த பிறகு,உள்ளாட்சித் தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *