வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற கோஷத்தை முன்னேடுத்துள்ள த.மா.கா. தமிழக இளைஞர்களின் எதிர்காலம் மதுவினால் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறது.
எனவே மதுவிற்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.
இது பூரண மதுவிலக்கை தமிழக அரசு கொண்டு வரவும் குடிக்கு எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும் உதவும் என்று நம்புகிறோம்.
இந்த கையெழுத்து இயக்கத்தை நாளை காலை 10.30 மணிக்கு மயிலாப்பூரில் நான் தொடங்கி வைக்கிறேன்.
தொடர்ந்து அக்டோபர் 2–ந் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.
அதன் பிறகு அந்த படிவங்கள் கவர்னரிடம் மனுவாக அளிக்கப்படும்.
