போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் – சீர்காழியில், ஜி.கே.வாசன்

தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை இருக்குமேயானால் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர இருப்பதால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். உரங்களின் விலை ஆண்டுதோறும் உயர்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு உர கம்பெனிகளுக்கு மானியம் வழங்கி வருகிறது. எனவே அரசு உரத்தின் விலையை உயர்த்தாமல் பார்த்து கொள்ள வேண்டும். நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *