பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமாகா 14ம் தேதி ஆர்ப்பாட்டம் – ஜி.கே.வாசன் பங்கேற்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்சநீதி மன்ற உத்தரவின்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மீனவர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணவேண்டும், முல்லை பெரியாறு, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும்,  நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசு நிறைவேற்ற கோரியும், மத்திய மாநில அரசுகள் மெத்தன போக்கை கைவிட்டு விரைவாக நிரந்தர தீர்வுகாண வேண்டியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வருகிற 14ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, தமாகா சார்பில், தலைவர் ஜி.கே.வாசன்  தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மூத்த துணைத் தலைவர், மாநில  துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், சென்னை மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், துணை அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள்  இயக்க தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர். – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=104897#sthash.aRoPwXlj.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *