திமுக, அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: ஜி.கே.வாசன்

திமுக, அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: ஜி.கே.வாசன் குளித்தலையில் தேமுதிக வேட்பாளர் ஜமுனாவை ஆதரித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் பேசியது:

குளித்தலை, தோகைமலையில் பிரச்சாரம் மேற்கொண்ட, தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதாவின் பிரச்சார வாகனத்தை திமுகவினர் வழிமறித்து, தாக்கியுள்ளனர். இது அவர்களின் தோல்வி பயத்தையே காட்டுகிறது.

மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், குளித்தலையில் வாழை குளிர்பதனக் கிடங்கு, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். இத்தேர்தலில், அதிமுக, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விஜயகாந்த் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், மக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *