தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், ‘கிறிஸ்துமஸ் விழா’

1935504_942320599176213_2936879416797740909_n

மழை–வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,200 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியாக சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு, கட்சியின் மூத்த துணைத்தலைவர் திரு.எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார்.

சிறுபான்மை பிரிவு தலைவர் திரு.அமீர்கான், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் திரு.முருகன், திரு.பிஜூ சாக்கோ உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

த.மா.கா. தலைவர் திரு.ஜி.கே.வாசன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மெட்ரோ பாலிட்டன் ஆர்த்தொடாக்ஸ் சிரியன் திருச்சபையின் துணை ஆயர் ஜார்ஜ் வர்கீஸ், சென்னை சி.எஸ்.ஐ. பேராயம் பிஷப்ஸ் சாப்ளின் அருட்தந்தை பால் பிரான்சிஸ், சாந்தோம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருட்தந்தை எம்.இருதயம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

த.மா.கா. மூத்த துணைத்தலைவர்கள் திரு.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், திரு.பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் திரு.சி.ஞானசேகரன், பொதுச்செயலாளர் திரு.விசுவநாதன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.