தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்லுகின்ற தகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்லுகின்ற தகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது.

தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் சூளுரை

தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் இன்று நடந்தது.

ஐயா ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பொதுமக்கள், வியாபாரிகளிடம் கையெழுத்து வாங்கி இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது :–

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் சார்பில் குடிகெடுக்கும் மதுவேண்டாம் என்று தமிழக அரசை வற்புறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் இங்கு தொடங்கி வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்லுகின்ற அளவுக்கு 100 சதவீதம் தகுதிஉடைய கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதான்.

இப்படி சொல்வதற்கு பலகாரணங்கள் உண்டு.

முதல் காரணம்

ஆட்சியில் இருக்கும் போது பொதுமக்களிடம் கருத்துகேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு எல்லா இடங்களிலும் மதுக்கடைகளை திறந்து வைத்தது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அல்ல.

2–வது காரணம்

ஆட்சி நடத்தும் போது மதுக்கடைகளை திறந்து மக்களை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கி வேடிக்கை பார்த்தது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அல்ல.

3–வது காரணம்

தாங்கள் ஆளும் மாநிலங்களில் ஒரு நிலையில் மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு தமிழ்நாட்டில் மட்டும் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று ஒரு நிலை எடுக்கும் தேசிய கட்சி போன்றதல்ல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.

தமிழ்நாட்டில் 9 ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் மதுப்பழக்கம் இல்லை அதனால் தான் அவரது ஆட்சி பொற்கால ஆட்சி என்று கூறப்படுகிறது.

அவரது படத்தில் கொடியில் பொறித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதான் மது இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று போராடுகிறது.

மதுக்கடைகளை ஒரே நேரத்தில் மூடிவிடவேண்டும் என்பது எங்களது வேண்டுகோள் அல்ல

மக்கள் எண்ணத்திற்கு ஏற்ப தமிழக அரசு செயல்பட வேண்டும் மதுவிலக்கை படிப்படியாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள் அதை அமல்படுத்த சில முக்கிய பணிகளை அரசு செய்ய வேண்டும் என்றார்.