ஜெ. இறப்பு, ஓபிஎஸ் நீக்கம் அதிமுக தலைமை தெளிவுபடுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை –

திருச்சியில் தமாகா மாநில தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி: தமிழகத்தில்நடந்த முதல்வர் தேர்வு ஜனநாயக ரீதியாக நடந்திருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. கடந்த 2 மாதமாக முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை திடீரென நீக்கியதை மக்களுக்கு அதிமுக தலைமை தெளிவுப்படுத்த வேண்டும். அதுபோல ஜெயலலிதாவின் இறப்பையும் தெளிவுப்படுத்த வேண்டும். புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பது தேர்தல் வரும்போதுதான் தெரியவரும். காலம் தாழ்த்தாமல் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை கடலில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவத்தில் முதல் நாளில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியாக இருந்துவிட்டது. 3வது நாளில்தான் அதற்கான பணிகள் தொடங்கியது. முன்கூட்டியே திட்டமிடவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி அவர்கள் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு வாசன் கூறினார். – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=103312#sthash.1lnE1qoA.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *