ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் மது விலக்கு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்

ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் மது விலக்கு அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்
தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
மது விலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் வரிந்து கட்டி களம் இறங்கி உள்ளன.
போராட்டத்தின் காரணமாக சுதந்திர தின விழாவில் மது விலக்கு பற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. பல கட்சி தலைவர்களும் சுதந்திர தின விழாவில் அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தனர்.
ஆனால் சுதந்திர தின உரையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மது விலக்கு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அரசியல்கட்சி தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நமது தேசத்தின் 69–வது சுதந்திர தின நன்னாளிலே 7 கோடி தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தமிழக அரசு பூரண மது விலக்கை தமிழகத்திற்கு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் இருந்தது. அப்படி இல்லையெனில் படிப்படியாக மதுக்கடைகளை மூடும் திட்டத்தை வகுத்து தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் என்று நம்பியிருந்தோம்.
இந்த முக்கிய அறிவிப்பை நம்பியிருந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது தமிழக அரசு.
எனவே தமிழக அரசு வருகின்ற சட்டமன்ற தொடரிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்ளோ பூரண மது விலக்கை அறிவிக்க வேண்டுமென்று த.மா.கா. கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
11846655_1619659854955948_8000946108746793818_n