பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
பரமக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் சோ.பா. ரெங்கநாதன் இல்ல நிகழ்ச்சியில் புதன்கிழமை கலந்துகொண்ட ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்துவரும் கலவரத்தால் ஜம்மு காஷ்மீர்-ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால், அமர்நாத் யாத்திரை சென்ற 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்குவதற்கு இடமின்றியும், உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் அரசுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, கலவரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக யாத்ரீகர்கள் பாதுகாப்பாக திரும்ப மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
அதேபோல், தெற்கு சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரினால், படிப்புக்காகவும், வியாபாரத்துக்காகவும் அங்கு சென்றுள்ள 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க இந்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஊடகங்களில் வரும் செய்திகளை வைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை எனத் தெரிகிறது. சமூக வலைத்தளத்தின் மூலம் பிறரை பழிவாங்கும் எண்ணத்தில் தவறான செய்திகளை பரப்புவது நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
