காவிரி, பாலாறு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு விவகாரம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமாகா இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மூத்த தலைவர் ஞானதேசிகன் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:

தமிழக விவசாயிகள், மீனவர் களின் நியாயமான கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் ஒழுங்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும். பாலாறு விவகாரத்தில் எந்த நடவடிக்கையாக இருந் தாலும் இரு மாநில அரசுகள் ஒத்துழைப்போடுதான் எடுக்க வேண்டும். தமிழர் மீனவர்களின் 120 படகுகள் இலங்கையில் உள்ளன. அதில் 18 படகுகள் சேதடைந்துள்ளன. இதற்கான இழப்பீட்டுத் தொகையை இலங்கை அரசு வழங்க வேண் டும். மேலும், 120 படகுகளை மீட்டு தமிழக மீனவர்களிடம் வழங்க வேண்டும். கச்சத்தீவில் இலங்கை அரசு கண்காணிப்பு கோபுரம் அமைப்பதை மத்திய அரசு தடுக்க வேண்டும். மேலும், அங்கு தமிழர் கள் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும்.

தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி, மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும். தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *