காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், தமிழக மீனவர் பிரச்னை ஆகியவற்றுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜியை அவர்களை நேரில் சந்தித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தினார்.
தில்லியில் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் நேற்று ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
சுமார் 30 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பு பிறகு தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் கூறியதாவது:
* “இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது நடவடிக்கைக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
* காவிரி நதி நீரை உரிய முறையில் தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்குவதில்லை. இதனால், தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கை குழுவை அமைக்க மத்திய அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
என குடியரசுத் தலைவரை கேட்டுக் கொண்டேன் என்றார்.
* தமிழகத்துக்கு தேவையான நீரை உரிய கால முறையில் திறந்து விடவும் கர்நாடகத்தை மத்திய அரசு வற்புறுத்தும்படி அறிவுறுத்த வேண்டும் எனவும் திரு.பிரணாபிடம் கூறினேன்.
* முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துடன் கேரள அரசு கடைப்பிடித்து வரும் மோதல் போக்கு தொடர்பாகவும் குடியரசுத் தலைவரிடம் விளக்கினேன்.
இப்பிரச்னைகள் தொடர்பாக ஏற்கெனவே தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நடத்தி மக்களின் எண்ணங்களை பிரதிபலித்து வருகிறது.
இக்கோரிக்கைகளை மத்திய அரசு விரைவாக செயல்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொண்டேன்’ என்றார் ஐயா ஜி.கே.வாசன்
