ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதற்கு
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள்
கிழமை வெளியிட்ட அறிக்கை:-
ஐஐடி மாணவர் சேர்க்கையில் அடுத்த கல்வியாண்டு சேர்க்கையில் புதிய விதிமுறைகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 மதிப்பெண்ணைக் கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐஐடி நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க பொதுப் பிரிவினர் பிளஸ் 2 தேர்வில் 40 சதவீதம் குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டும் என்பதை 65 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதனால், கிராமப்புற மாணவர்களின் ஐஐடி கனவு நிறைவேறாமல் போகும். எனவே, பழைய விதிமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
