தமிழக அரசு மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: ஜி.கே வாசன்

தமிழக அரசு மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: ஜி.கே வாசன்

தமிழக அரசு மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை உடனடியாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை சரி பாதியாக குறைத்து, கடை திறந்திருக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

25 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு மதுக்களை விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்ய வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் குடித்துவிட்டு ஓட்டினால் அவர்களது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஜி.கே வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.