: தமிழக அரசு அறிவித்த அன்னூர் ஜவுளிப் பூங்கா திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்த அன்னூர் ஜவுளிப் பூங்கா திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் கோரிக்கை

அன்னூரில் தமாகா சார்பில் மக்களை நோக்கி மக்கள் தளபதி என்னும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு த.மா.கா மாவட்டத் தலைவர் அன்னூர்.கே.ராமலிங்கம் தலைமை வகித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், மக்களவை முன்னாள் உறுப்பினர் கார்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமாகா தலைவர் ஐயா ஜி.கே.வாசன் கலந்து கொண்டு அன்னூர் பயணியர் மாளிகை முன்பு கொடியேற்றி வைத்து பேசியதாவது:

அவிநாசி-அத்திக்கடவுத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

திராவிடக் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்தும் தமிழகத்தை வளமான பாதைக்கு கொண்டு வர முடியவில்லை.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகாவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

2,100 ஏக்கர் பரப்பளவில் ரூ.3ஆயிரம் கோடியில் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய ஜவுளிப் பூங்காவை அன்னூரில் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இத்திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டத்தை அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றார்.