விலைவாசியை நிலைத்த தன்மையோடு வைத்திருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:
ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
ஐயா ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :-
கடந்த 15 முதல் 20 நாட்களுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்களான பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் விலைகள் 30 முதல் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
மத்திய அரசு வேளாண் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து, உணவுப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் ஐயா ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
உணவுப் பொருட்களை பதுக்காமல் வெளிப்படையாக விற்பனை செய்திட மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
